தாட்கோ மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய இனத்தைச் சார்ந்தவர்கள் அயல்நாடு சென்று புகழ் பெற்ற பல்கலைகழகங்களில் உயர் கல்வி பயில அடிப்படை தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட TOEFL, IELTS, GRE, GMAT போன்ற தகுதித் தேர்விற்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல்.
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும கிறித்துவ மதம் மாறிய இனத்தை சார்ந்தவர்கள் அயல்நாடு சென்று புகழ் பெற்ற பல்கலைகழகங்களில் உயர் கல்வி பயில அடிப்படை தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட TOEFL, IELTS, GRE, GMAT போன்ற தகுதித் தேர்விற்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொறியியல் மற்றும் மேலாண்மை (Engineering and Management), தூய அறிவியல் மற்றும் பண்பாட்டு அறிவியல் (Pure Science and applied Medicine), வேளாண் அறிவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் (Agricultural Science and Medicine), சர்வேதச வர்த்தகம், பொருளாதார, கணக்கியல் நிதி, (International Commerce, Economic, Accounting Finance) மனிதநேயம், சமூக அறிவியல், நுண்கலை சட்டம், கலை மற்றும் அறிவியல், (Humanities. Social Science, Fine arts, Law and Arts and Science) போன்ற படிப்புகளை அயல் நாடுகளில் பயில விரும்புவராக இருக்க வேண்டும், குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும், இப்பயிற்சிக்கான செலவீனம் தாட்கோவால் வழங்கப்படும்.
இப்பயிற்சி முடித்து தேர்ச்சி பெறுவதன் மூலம் மாணாக்கர்கள் தாம் விரும்பும் அயல் நாடுகளிலுள்ள கல்வி நிறுவனத்தில் மேல் படிப்பினை தொடர்வதற்கு வாய்ப்பு பெறலாம் இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம், எண்-3, சாலை விநாயகர் கோவில் ரோடு, விருப்பாட்சிப்புரம், தருமபுரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.
.gif)

