Type Here to Get Search Results !

காரிமங்கலம் பேரூராட்சி வளாகத்தில் பெண்கள் சமத்துவ தின விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைப்பெற்றது.


தருமபுரி மாவட்டம் மாட்லாம்பட்டியில் அமைந்துள்ள சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியின் சார்பாக பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியை பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர்.மனோகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு தாளாளர் செந்தில்குமார், கல்லூரி முதல்வர் பிரேமகுமாரி ஆகியோர் தலைமை வகித்தனர், பேரூராட்சி செயல் அலுவலர் ஆயிஷா முன்னிலை வகித்தார். பெண்களின் சமத்துவத்தை எடுத்துரைத்து நடைப்பெற்ற இப்பேரணியில் குழந்தை திருமணம், பெண்கள் நாட்டின் கண்கள், பெண்களின் சமத்துவம், பெண்மையை போற்றுவோம், வரதட்சணையை ஒழிப்போம், பெண்களுக்கு சம உரிமை அளிப்போம் போன்ற  வாசகங்களை அனைத்து துறை மாணவிகளும் கையில் பதாகை ஏந்தி கோஷமிட்டு ஊர்வலமாக சென்றனர்.


அதனை தொடர்ந்து கல்லூரியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் தர்மபுரி அரசு சட்டக் கல்லூரி பேராசிரியர் லஷ்மி விஸ்வநாதன் அவர்கள் கலந்து கொண்டு சட்டத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் பற்றி மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். மேலும் மாணவிகள்  பெண்களின் சமத்துவம் என்ற தலைப்பில் ரங்கோலி கோலம் வரைந்து வண்ணம் இட்டு பெண்களின் சமத்துவத்தை எடுத்துரைத்தனர்.


இந்நிகழ்ச்சியில் சக்திகைலாஷ் கல்லூரி மாணவிகள், துணை முரல்வர்கள், பேராசிரியர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies