Type Here to Get Search Results !

பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய உருதுநடுநிலை பள்ளியில் காலை உணவு திட்டத்தை பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி துவக்கி வைத்தார்.


தருமபுரி மாவட்டம்  பாலக்கோடு தேர்வுநிலை பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய உருது நடுநிலை பள்ளியில் காலை உணவு திட்டத்தை பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி துவக்கி வைத்தார். நிகழ்ச்க்கு பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி முன்னிலை வகித்தார்.

தமிழக முதல்வரின் கனவு திட்டமான காலை உணவு திட்டத்தினை தமிழக முழுவதும் உள்ள அனைத்து தொடக்க பள்ளிகளிலும் இன்று தொடங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார், மேலும் இன்று காலை உணவு திட்டத்தினை நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்  திட்டத்தினை துவக்கி வைத்தார், அதனை தொடர்ந்து பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய உருது நடுநிலை பள்ளியில் காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்கி மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

 

இந்நிகழ்ச்சியில் துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், துணைத் தலைவர் தாஹசீனா இதாயத்துல்லா, கவுன்சிலர்கள் சரவணன், சாதிக் பாஷா, ரூஹித், பிரியாகுமார், மசியுல்லா, திமுக  கிளை செயலாளர்கள் ராஜீ, கணேசன், குஷான் மியான், செந்தில் மற்றும் கட்சி நிர்வாகிகள் சக்திவேல், குமரன், சரவணன், மாதேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில் பள்ளி தலைமை ஆசிரியர் ரசீதா நன்றி தெரிவித்தார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies