மை தருமபுரி அமைப்பின் மூலம் தருமபுரியில் மனிதநேயமிக்க பல நல்ல சேவைகளை செய்து வருகின்றனர். இரத்ததானம், உணவு வழங்குதல், மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு உதவுதல், ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்தல், பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மேலங்கி வழங்குதல், கண் தான விழிப்புணர்வு போன்ற சமூக சேவைகளை கடந்த 11 ஆண்டுகளாக செய்து வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு தினம்தோறும் உணவு வழங்கி வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 14 2021 தமிழ் புத்தாண்டு முதல் மை தருமபுரி பசிக்குதா வாங்க சாப்பிடுங்க திட்டம் ஆரம்பித்து தினந்தோறும் 100 முதல் 200 ஆதரவற்ற ஏழை எளிய மக்கள், அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் பார்வையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இதை தவிர முக்கிய நிகழ்ச்சி தினங்களில் 500 முதல் 700 நபர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். மை தருமபுரி அமைப்பின் மனிதநேயமிக்க செயலை பாராட்டும் விதமாக தமிழகத்தின் தலைசிறந்த சமூக சேவை அமைப்பான எண்ணங்களின் சங்கமம் நிறுவனர் மதிப்பிற்குரிய அய்யா சேவை திலகம் ஜெ.பிரபாகரன் அவர்கள் 844 வது நாள் மை தருமபுரி பசிக்குதா வாங்க சாப்பிடுங்க திட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உணவு வழங்கினார்.
மை தருமபுரி அமைப்பின் நிர்வாகிகள், தன்னார்வலர்கள் அனைவரையும் பாராட்டி மேலும் சமூக சேவையை சீரும் சிறப்பாகும், மனிதநேயம் மிக்க சமூக செயல்களை மேலும் சிறப்பாக செய்திடவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.