தருமபுரி மாவட்டம் அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தீர்த்தமலை அரசு மேல்நிலைபள்ளி நரிப்பள்ளி வேப்பம்பட்டி ஆகிய பள்ளிகளில் பயிலும் 386மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அரூர் எம்எல்ஏ. வே.சம்பத்குமார் வழங்கி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
முன்னதாக நரிப்பள்ளி அரசு பள்ளியில் முதலிடம் பெற்ற ராகவி என்ற மாணவிக்கு நிதி வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞரும் ஒன்றிய செயலாளருமான ஆர்.ஆர்.பசுபதி ஒன்றிய பொருலாளர் சாமிக்கண்ணு ஒன்றிய குழு துணைதலைவர் அருண் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைசெயலாளர் ஆ.சிற்றரசு ஒன்றியகுழு உறுப்பினர் புஷ்பலதா ரவிக்குமார் கூட்டுறவு சங்க தலைவர் சிவன் ஊராட்சிமன்ற தலைவர் சென்னகிருஷ்ணன் எம்.ஆர்.பசுபதி தலைமை ஆசிரியர்கள் மகாத்மா சகுந்தலா மகேந்திரன் ஆசிரியர்கள் ஜெய்பீம்செல்வன், தீர்த்தகிரி, பாரதி. நடராஜ் கோவிந்தராஜ், சங்கர், மாது. கனகராஜ். ஆசிரியைகள் வளர்மதி. புவனேஷ்வரி, ஜெயலஷ்மி உள்பட பலர் கலந்து கொண்டனர்.