அதனை தொடர்ந்து அம்மனுக்கு கொலு வைத்தல், கங்கா பூஜை, கோபூஜை, நவக்கிர சாந்தி ஹோமம், பஞ்சசுத்தி ஹோமம், உள்ளிட்டவை நடைப்பெற்றன. நேற்று பனங்காடு ஊர் மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர் அம்மா அனுப்புதல் நிகழ்சி நடைப்பெற்றது.
முக்கிய நாளான இன்று அதிகாலை முதலே ஸ்ரீ மகா முத்துமாரியம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் மாவிளக்கு, தீச்சட்டி, பால்குடம் எடுத்தும். அம்மன் வேடம் தரித்தும் தங்களது நேர்த்திகடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.
ஆங்காங்கே பொதுமக்கள், பக்தர்களுக்கு கூழ் மற்றும் நீர் மோர் வழங்கினர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாகுழுவினர் செய்திருந்தனர்.