தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்து பொ. துறிஞ்சிப்பட்டி கிராமத்தில் பல்வேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இதில் பாப்பிரெட்டிப்பட்டி - தர்மபுரிக்கு செல்லும் பிரதான சாலை அருகே குறவன் இனத்தைச் சார்ந்த பத்து குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு உள்ள குடியிருப்பு சாலையில் மனோகரன், ராஜேஸ்வரி, குடும்பத்தினர் தீண்டாமை தடுப்புச் சுவர் கடந்த 2017-ம் ஆண்டு கட்டியுள்ளனர்.
அன்று முதல் இன்று வரை அந்த வழியில் செல்ல முடியாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வந்த நிலையில், தற்போது சென்னையில் உள்ள முத்துக்கிருஷ்ணன் என்ற வழக்கறிஞர் மூலம் தர்மபுரி மாவட்ட ஆட்சியர்க்கு கடந்த 19.06.2023 அன்று அகிலா, கணவர் ராஜேந்திரன், புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் அதன் மீது பரிசீலனை செய்து பின்பு, அரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பினரையும் அழைத்து அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து அதை பரிசீலனை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன் அடிப்படையில் இன்று அகிலா கணவர் ராஜேந்திரன் மற்றும் பாதிக்கப்பட்ட மற்ற குடும்பத்தினரும், தீண்டாமை தடுப்புச் சுவர் கட்டிய மனோகரன் ராஜேஸ்வரி குடும்பத்தார் அரூர் வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகரிடம் இன்று ஆவணங்களை சமர்ப்பித்தனர். இரு தரப்பு ஆவணங்களையும் பெற்றுக்கொண்ட வருவாய் கோட்டாட்சியர் அதன் மீது பரிசீலனை செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இது பற்றி பாதிக்கப்பட்டவர் மற்றும் வழக்கறிஞரிடம் கேட்கும் போது, நாங்கள் குறவன் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் குடியிருப்பு பகுதியில் இடையே தீண்டாமை தடுப்புச் சுவர் கட்டியதால் எந்த ஒரு அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு வழியில் செல்ல முடியாமல் நிலையில் தவித்து வருவதாகவும், குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு வழியில்லாமல் தவிப்பதாகவும், பல்வேறு இண்ணல்களுக்கு ஆளாகி உள்ளதால் அந்த தீண்டாமை தடுப்பு சுவரை அகற்ற வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டு, பின்பு அரூர் வருவாய் கோட்டாட்சியரிடம் ஆவணங்களை சமர்ப்பிக்கப்பட்டு தங்களின் ஆதங்கத்தை கண்ணீர் மல்க கூறினர்.
மேலும் வழக்கறிஞர் பேசுகையில்: சர்வே எண் 106/1-ல் உள்ள குடியிருப்பு பாதையை எந்த ஒரு தனிநபரும் சுயநலத்திற்காக பயன்படுத்தக் கூடாது என்று 2007 ஆம் ஆண்டு ஸ்டே ஆர்டர் வாங்கியுள்ளதாகவும், அதை மீறி அந்த இடத்தில் தீண்டாமை தடுப்புச் சுவர் கட்டியதற்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இந்த தீண்டாமை சுவரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்ததின் அடிப்படையில் அந்த மனு மீது இன்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பினர்களும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் மீது பரிசீலனை செய்து மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கொடுப்பதாக கூறியிருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.