நிகழ்விற்கு தமிழ்நாடு அனைத்து பதிவுற்ற மருந்தாளுநர்கள் நலச்சங்கத்தின் மாநில பொருளாளர் த.சந்தோஷ்குமார் தலைமை வகித்தார். தருமபுரி மாவட்ட சங்க இலக்கிய ஆய்வு நடுவத்தின் தலைவர் நா.நாகராஜ் முன்னிலை வகித்தார். கல்லூரி மாணவி நா.ஜனனி வரவேற்று பேசினார். உதவிப் பேராசிரியர் ர.விக்னேஷ் வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யின் தலைமையாசிரியர் மா.பழனி மற்றும் மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ப.சண்முகம் உள்ளிட்டோர் சிறப்புரை வழங்கினர். தலைமையாசிரியர் பழனி பேசுகையில், குழந்தைகளுக்கு நல்ல அறநெறி கதைகள் கூற வேண்டும். கதை சொல்லும் வழக்கம் தற்போது சூழலில் அருகி வருகிறது.
பெற்றோர்களும், ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு அறநெறி கதைகள் கூற வேண்டும். குடும்பத்தில் பெற்றோர்கள் நல்ல பழக்க வழக்கங்களை குழந்தைகளுக்கு சொல்லி தரவேண்டும். செல்போன் மற்றும் தொலைக்காட்சியில் குழந்தைகள் நேரத்தை செலவிடாமல் நல்ல புத்தங்களை படிக்க வேண்டும் என்றார். நிறைவாக கல்லூரி மாணவி இரா.சினேகா நன்றி கூறினார்.
நிகழ்வில் ஏராளமான ஊர் முக்கிய பிரமுகர்கள்,பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.