தர்மபுரி அடுத்த பைசுள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் "மேலாண்மை துறை" சார்பாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி துவக்க விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் பொறுப்பு முனைவர் மோகனசுந்தரம் அவர்கள் கலந்துகொண்டு தலைமை உரை ஆற்றினார் ,முனைவர் பஞ்சானந்தம் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தர் அண்ணாமலை பல்கலைக்கழகம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
இதற்கு முன்னதாக முனைவர் கார்த்திகேயன் துறை தலைவர் மேலாண்மை துறை வரவேற்புரை நிகழ்த்தினார் மற்றும் முனைவர் செல்வ விநாயகம் நன்றி உரை நிகழ்த்தினார் மற்றும் முனைவர் சுரேஷ் முனைவர் முகமது நபி முனைவர் தஸ்நிம் பேராசிரியர்கள் உடன் இருந்தனர்.
.gif)

