Type Here to Get Search Results !

மாவட்ட தொழில் மையம் நடத்தும் சுய தொழில் கடன் திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு. - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி மாவட்டத்தில் சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு மாவட்ட தொழில் மையம் மூலம் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (AABCS),  வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS), மற்றும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP), பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் (PMFME),  ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு பிரத்யேகமாக ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுதிறனாளிகள், சிறுபான்மையினர் மற்றும் மகளிருக்கு, காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நாளை (08.08.2023) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ள தகுதிவாய்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் புகைப்படம், மாற்றுசான்றிதழ், சாதிசான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, விலைப்பட்டியல் மற்றும் திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்களுடன் வரும்பட்சத்தில் இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவேற்றப்பட்டு கடன் திட்ட விண்ணப்பம் உடனடியாக வங்கிக்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  மேலும் விவரங்களுக்கு 89255 33940, 89255 33942 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளவும். 


புதிய தொழில் துவங்க ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெறலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884