Type Here to Get Search Results !

மாரண்டஹள்ளி பேரூர் திமுக சார்பில் மாரண்ட அள்ளி நான்கு ரோட்டில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு.


மாரண்டஹள்ளி பேரூர் திமுக சார்பில் மாரண்ட அள்ளி நான்கு ரோட்டில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு  5 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் திமுகவை சார்ந்த பேரூராட்சி தலைவரும் பேரூர் செயலாளருமான வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திகா பன்னீர்செல்வம், கவுன்சிலர்கள் கீதாவடிவேல், லட்சுமிமுனிராஜ், ரீனா குழந்தைவேலு, அபிராமி, சிவக்குமார், வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் ராஜா, அவைத்தலைவர் செங்கல் மணி, பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி பன்னீர்செல்வம், ஒன்றிய பிரதிநிதி கிருஷ்ணகுமார், வழக்கறிஞர் வடிவேலு, ஒன்றிய துணைச் செயலாளர் சண்முகம், முன்னாள் அவை தலைவர் கிருஷ்ணன், காந்தி, சதீஷ்குமார், வரதராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies