இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 11.08.2023 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ள பெண்களுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், TATA ELECTRONICS, HOSUR நிறுவனம் கலந்து கொண்டு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாமில் பங்கேற்பதற்கான கல்வித்தகுதி, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி, ITI தேர்ச்சி, Diploma தேர்ச்சி (2021, 2022, 2023 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும்) ஆகும். இக்கல்வித்தகுதியில், 18 முதல் 22 வயது வரை உள்ள பெண் வேலைநாடுநர்களை மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு, மாதச் சம்பளமாக ரூ.12,000/- வழங்கப்படும். மேலும், தங்கும் விடுதி வசதி இலவசமாக அளிக்கப்படும். வேலைநாடுநர்கள், தங்களது அசல் (ம) நகல் கல்விச்சான்றிதழ், ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் முகாமில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இது ஒரு இலவசப்பணியே ஆகும்.
ஆகவே, மேற்படி பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ள பெண் வேலைநாடுநர்கள், வருகின்ற 11.08.2023 அன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கு தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ள தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக