இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பத்மாவதி, முன்னாள் வட்டார தலைவர் கருணாநிதி, மாவட்ட வர்த்தக அணி தலைவர் இராமமூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முகாமில் வெள்ளிச்சந்தை, பிக்கன அள்ளி, மல்லுப்பட்டி, சூடப்பட்டி, மகேந்திரமங்கலம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து கண் சம்பந்தப்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை எடுத்துக் கொண்டு அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இம்முகாமினை பிக்கன அள்ளி கிளை திமுக, தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, வாசன் கண் மருத்துவமனை, இராயக்கோட்டை அரிமா சங்கம உள்ளிட்டோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஹரிபிரசாத், புதூர் பழனிச்சாமி, மாவட்ட தொழில் நுட்ப அணி ஆனந்த், சிவலிங்கம், ரங்கசாமி, வஜ்ரவேல், சையத் ஜலால்அஹமத், மாதேஷ், சங்கர், நரசிம்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக