தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே திருமல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் சதாசிவம் (வயது.45) இவரது மனைவி தெய்வானை (வயது.40), இவர்கள் புலிக்கரை பகுதியில் ஓட்டல் கடை வைத்து நடத்தி வருகின்றனர்.
நேற்று காலை ஓட்டலுக்கு செல்வதற்காக கனவன் - மனைவி இருவரும் XL சூப்பர் வாகனத்தில் தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த மினி சரக்கு வாகனம் இவர்களது XL சூப்பர் மீது மோதியதில் கனவன் மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமணையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்து குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
.gif)

.jpeg)