தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் பெரியார் பல்கலைக்கழக பட்டம் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. மேலாண்மை துறை சார்பாக வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது "சுகுணா ஃபுட்ஸ்" நிறுவனத்திற்கு மாணவர்களை தேர்வு செய்தனர், தர்மபுரி கிருஷ்ணகிரி சுற்றியுள்ள பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இந்நிகழ்வில் முன்னதாக பெரியார் பல்கலைக்கழக பட்டம் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் பொறுப்பு முனைவர் மோகனசுந்தரம் அவர்கள் தலைமை உரை ஆற்றினார் மற்றும் இந்நிகழ்ச்சியை முனைவர் கார்த்திகேயன் மேலாண்மை துறை தலைவர் மற்றும் செல்வவிநாயகம் பேராசிரியர் மேலாண்மை துறை முனைவர் தஷ்நிம் முனைவர் முகமத் நபி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.