பாலக்கோட்டில் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் 5ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

பாலக்கோட்டில் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் 5ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.

 

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி திமுக பேரூர் செயலாளரும், பேரூராட்சி தலைவருமான பி.கே.முரளி அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.


இந்நிகழ்ச்சிக்கு திமுகவின் மாவட்ட பொருளாளர் எம்.எம்.முருகன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பி.கே.முருகன், முன்னாள் பொதுக்குழு உறுப்பிணர் சண்முகம், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சந்தர், ஒன்றிய துணை செயலாளர் ரவி, பேரூர் கழக அவைத் தலைவர் அமானுல்லா, மீனவர் அணி துணை அமைப்பாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக கட்சி தொண்டர்கள் கலைஞர் திருஉருவ படத்திற்க்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் இதாயத்துல்லா, நெசவாளர் அணி நிர்வாகி பட்டு அஜிசுல்லா, பேரூராட்சி மன்ற உறுப்பிணர்கள் சாதிக்பாஷா, சரவணன், லட்சுமி ராஜசேகர், வகாப், ரூஹித், பத்தேகான், மோகன், ஜெயந்திமோகன், பிரியாகுமார், அரவிந்த், தீபா சரவணன், வார்டு உறுப்பிணர்கள் ராஜீ, கணேசன், காமராஜ், மோகன், மாரியப்பன், ஆறுமுகம், மியான், ஜபியுல்லா, வடிவேல், ராமமூர்த்தி பேரூர் கழக துணை செயலாளர்கள் பாபு, மாதேஷ், பொருளாளர் துரை, மாவட்ட பிரதிநிதி செந்தில், ஒன்றிய பிரதிநிதி பெரியசாமி, மாவட்ட பிரதிநிதி முத்துசாமி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர்  அழகுசிங்கம், ஜிக்கிரியா, ஏஜாஸ், நவ்சாத் உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad