Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் சந்திராயன் - 3 வெற்றியை இனிப்பு வழங்கி கொண்டாடிய பாஜகவினர்.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ்நிலையம் முன்பு சந்திராயன் - 3 வெற்றியை பாஜக  மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பி.கே.சிவா தலைமையில் இனிப்பு வழங்கி  கொண்டாடினர்.


இதில் சிறப்பு அழைப்பாளராக தேசிய சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் வேலுர் இப்ராஹிம் கலந்து கொண்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். தொண்டர்கள் இந்நிகழ்ச்சியை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.


இந் நிகழ்ச்சியில் மாநில கல்வி பிரிவு செயலாளர் நந்தகுமார், மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் மோசஸ், மற்றும் நிர்வாகிகள் பெரியண்ணன், ஸ்ரீதேவி, கிருஷ்ணன், சக்திவேல், பரத், டைகர் சிவா உள்ளிட்ட ஏராளமான கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies