Type Here to Get Search Results !

அமானி மல்லாபுரம் எம்.ஜி.ஆர் நகரில் சுற்றுலா மினி வேன் மோதி கூலி தொழிலாளி படுகாயம்.


தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அமானிமல்லாபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஆறுமுகம் (வயது. 58) இவர் கடந்த 20ம் தேதி மளிகைசாமான் வாங்க கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார், சிவாஜி நகர் அருகே சாலையை கடக்க முயன்ற போது மாரண்டஅள்ளியில் இருந்து பாலக்கோடு நோக்கி வந்த சுற்றுலா மினி வேன் இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார், உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies