Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் இணைந்து எண் மண் எனது தேசம் திட்டத்தின் அடிப்படையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு.


தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் இணைந்து எண் மண் எனது தேசம் திட்டத்தின் அடிப்படையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தருமபுரி ஊராட்சி ஒன்றியம் கே நடுஅள்ளியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் அப்பாமணி தலைமையில் நடைபெற்றது. 


தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி கே சாந்தி இ ஆ ப அவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு விழாவினை சிறப்பித்தார். சுதந்திரதின அமுத பெருவிழா நிறைவு முன்னிட்டு முன்னாள் இராணுவ வீரர்களை மாவட்ட ஆட்சியர் சால்வை அணிவித்து கவுரவித்தார். 


நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சி திருமதி மிரியம் ரெஜினா, உதவி இயக்குநர் ஊராட்சி திருமதி மாலா, முன்னாள் இராணுவவீரர்கள் நல அலுவலக உதவி இயக்குநர் வெங்கடேச ராஜ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் பாரத பிரதமரின் ஐந்து கொள்கைகள் குறித்த உறுதிமொழி யினை நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.


நிகழ்ச்சியில் 100க்கு மேற்ப்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies