தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் எதிரே ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள் , மின்வாரிய அலுவலகம் மற்றும் தக்காளிமண்டிக்கு வரும் விவசாயிகள் வியபாரிகள் இப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்பட்டு வருகின்றனர்
இப்பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயில், பிளாஸ்டிக் கழிவுகள், கோழி கழிவுகள், குப்பை கழிவுகள், ஓட்டல் கழிவுகள் என சாக்கடை கால்வாயை அடைத்து சாக்கடை நீர் வெளியேறாமல் துர்நாற்றம் வீசி வருகிறது, மேலும் கொசுக்கள், ஈக்கள் உற்பத்தியாகி உணவு பண்டங்களில் மீது அமர்வதால் பொதுமக்களுக்கு பல்வேறு உடல் நல கேடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது,
எனவே மாவட்டம் நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சாக்கடை கால்வாயை தூர்வாரி அப்புறபடுத்த பொதுமக்கள் கோரிக்கை .