தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டு பகுதிகளில் நாட்டின் 76வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தூய்மை பணி திட்டத்தை பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தொடங்கி வைத்தார்.
இதில் மழை நீர் வடிகால் தூய்மை பணிகளை பேருந்து நிலையம், இரயில் நிலையம், மார்க்கெட் பகுதிகளில் தூய்மை பணி செய்து மரக்கன்றுகள் நடப்பட்டது, இதனை தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பயன்படுத்துவதை தவிர்த்து மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வீடுகள் தோறும் குப்பைகளை பிரித்து வழங்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி, துணைத் தலைவர் தஹசீனா இதாயத்துல்லா, கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர் ரவீந்திரன், தலைமை எழுத்தர் அபுபக்கர், டெக்னிசியன், அலுவலர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.