Type Here to Get Search Results !

மை தருமபுரி NGO மற்றும் CKM சிட்ஸ் நிறுவனம் இணைந்து குழந்தைகள் இல்லத்திற்கு புத்தாடை வழங்கினர்.


மை தருமபுரி NGO மற்றும் CKM சிட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இணைந்து தருமபுரி இலக்கியம்பட்டியில் உள்ள குழந்தைகள் இல்லத்திற்கு சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்காக புத்தாடை வழங்கினர். 


ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவை முன்னிட்டு குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகள் தருமபுரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற இருக்கும் கலை நிகழ்ச்சி விழாவில் கலந்து கொள்வதற்கு புத்தாடை வழங்கினர். இந்த நிகழ்விற்கு CKM நிறுவனர் திரு.ரமேஷ் தலைமை தாங்கினார். 


மை தருமபுரி அமைப்பின் சார்பாக சதீஸ் குமார் ராஜா, தமிழ்செல்வன், அருணாச்சலம், மணீஷ், மை தருமபுரி மகளிர் அமைப்பினர் ஆசிரியர் பிரேமா, சமூக சேவகி அம்பிகா, தென்றல் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies