Type Here to Get Search Results !

சிறந்த சமூக ஆர்வலர் விருது பெற்ற தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் கிருஷ்ணன் அவர்களை பாராட்டிய‌ மை தருமபுரி அமைப்பினர்.


தருமபுரி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் சங்கம் மற்றும் சிறுகடை தள்ளு வண்டி தொழிலாளர் சங்கம் நடத்தி வருபவர் திரு.கிருஷ்ணன் அவர்கள். பலருக்கு கட்டுமான தொழிலாளர் நிதி கிடைக்க உதவி செய்து வருகிறார். 


தருமபுரி பைசுஅள்ளி ஸ்ரீ சங்கமித்ரா திருமண மண்டபத்தில் புதுயுகம் தொலைக்காட்சி சார்பாக நடைபெற்ற சுதந்திர தின பட்டிமன்ற நிகழ்வில் திரு.கிருஷ்ணன் அவர்களுக்கு சிறந்த சமூக ஆர்வலர் விருது வழங்கப்பட்டது. 


மை தருமபுரி அமைப்பின் சதீஸ் குமார் ராஜா, தமிழ்செல்வன், அருணாசலம், அருள்மணி மற்றும் மை தருமபுரி மகளிர் அமைப்பினர் ஆசிரியர் பிரேமா, சமூக சேவகி அம்பிகா, தென்றல் ஆகியோர் நேரில் சென்று கிருஷ்ணன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies