தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி வளாகத்தில் பேருந்து நிலையம் தற்காலிக இடமாற்றம் குறித்து லாரி, டிராவல்ஸ், ஜே.சி.பி உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் இன்று நடைப்பெற்றது. பேருராட்சி செயல் அலுவலர் டார்த்தி முன்னிலை வகித்தார்.
பேருந்து நிலைய சீரமைப்பு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு பேருந்து நிலையத்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது, ஆலோசனையில் திரௌபதி அம்மன் கோவில் முன்பு தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கலாம் என்றும், அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக லாரி, டிராவல்ஸ், கார், ஜே.சி.பி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
எனவே தற்காலிக பேருந்து நிலையம் இடமாற்றம் செய்வது குறித்து பொதுமக்களுக்கு விரைவில் அறிவிக்கப்படும் என ஆலோசனை கூட்ட முடிவில் பேருராட்சி தலைவர் பி.கே.முரளி அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் லாரி, டிராவல்ஸ், கார், ஜே.சி.பி உரிமையாளர், ஓட்டுநர்கள் திரளாக கலந்து கொண்டனர்.