ஆடி அமாவாசை மாகாலய அமாவாசை உள்ளிட்டவைகளில் நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது தமிழர்களின் வழக்கம். அந்த வகையில் இன்று ஆடி அமாவாசை என்பதால் தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக ஒகேனக்கலில் குவிந்துள்ளனர்.
ஒகேனக்கல் காவிரி கரையோரம் பூஜைகள் செய்து, காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்தனர். தொடர்ந்து காவிரி கரையில் அமைந்துள்ள ஸ்ரீ தேச நாதீஸ்வரர் உடனுறை ஸ்ரீ காவேரி அம்மன் ஆலயத்தில் தரிசனம் செய்தனர்.
ஆடி அமாவாசை முன்னிட்டு குடும்பம் குடும்பமாக ஒகேனக்கலில் பொதுமக்கள் குவிந்துள்ளனர்