தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது, தேசியக்கொடியேற்றி வைத்து காவல்துறையின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கு கொண்ட மாவட்ட ஆட்சியர் திருமதி. சாந்தி, முன்னாள் படை வீரர்கள் நலத்துறை, வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் 94 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நல திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் தருமபுரி மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலத்துறை சார்பில் சிறப்பாக மருத்துவ சேவை செய்த மருத்துவர்கள்,செவிலியர்கள், மருந்தாளுநர்கள், எக்ஸ்ரோ டெக்னீசியன்கள்,108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள், அலுவலக பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், முதலமைச்சரின் விரிவான பாதுகாப்பு திட்ட மருத்துவர்கள்6 என மொத்தம் நாற்பது பேருக்கு மாவட்ட ஆட்சியர் திருமதி. சாந்தி அவர்கள், அவரது சேவையினை பாராட்டி கேடயம் மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கினார்.
அந்த வகையில் பென்னாகரம் அரசு மாவட்ட தலமை மருத்துவமனைக்கு கேடயமும், அதே மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு மருத்துவராக பணிபுரிந்து வரும் மருத்துவர் ஜெ. கனிமொழி அவர்களின் மருத்துவ சேவையினை பாராட்டி நற்சான்றிதழை வழங்கினார் மாவட்ட ஆட்சியர் திருமதி. சாந்தி.