இக்கட்டிடத்திற்கு அருகே ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் உள்ளது, சுகாதார வளாகம் 3 ஆண்டுகளாக தண்ணீர் இல்லாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், புதர் மண்டி காட்சி அளிக்கிறது, பராமரிப்பு இன்றி உள்ள இந்த சுகாதார கட்டிடத்தில் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு பல்வேறு உடல் நல சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும் அங்கன்வாடிக்கு செல்லும் சிமெண்ட் சாலையை சிலர் ஆக்கிரமித்து சாலையின் குறுக்கே கற்களை வைத்து ஆக்கிரமித்து செய்து வருவதாலும், சாலையின் நடுவே சிமென்ட் மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளதால், பள்ளிக்கு மாணவர்களை அழைத்து செல்வதிலும், அங்கன்வாடி மையத்திற்க்கு அரசு வழங்கும் உணவு தானியங்களை வாகனத்தில் கொன்டு செல்ல முடியாமல் தலை மேல் கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்துடன் பலமுறை புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை மேலும் அமானி மல்லாபுரம் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும், கழிவு நீர் கால்வாய், குப்பை தொட்டிகள் போன்ற எந்த ஒரு சுகாதார பணிகளும் நடைபெறாமல், நிர்வாக சீர்கேட்டால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு அமானி மல்லாபுர ஊரட்சி உள்ள பல்வேறு பணிகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.