பின்னர், மிட்டாரெட்டிஅள்ளி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று, ஊராட்சியில் குடிநீர், சாலை, மருத்துவம், நூலகம், பொதுகழிவறை, கழிவுநீர் கால்வாய் போன்ற வசதிகளை மேம்படுத்துதல், குப்பையில்லா ஊராட்சியாகவும், காலநிலை மாற்றத்தை தடுக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல் போன்றவற்றை செயல்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறையின் 77-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அதியமான்கோட்டை அருள்மிகு காலபைரவர் சுவாமி கோவில் சார்பில் நடைபெற்ற பொது விருந்தில் கலந்துக்கொண்டார்.
இந்நிகழ்ச்சிகளில், நல்லம்பள்ளி வட்டாட்சியர் ஆறுமுகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி, இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ஜீவானந்தம், நல்லம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் மகேஷ்வரி பெரியசாமி, மிட்டாரெட்டிஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் சண்முகம், பாமக மாநில செயற்குழு உறுப்பினர் பெ.பெரியசாமி, முன்னாள் ஊராட்சி தலைவர் மு.மனோகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் த.காமராஜ், ஆ.அன்புகார்த்திக், புனிதம்பழனிசாமி, மிட்டாரெட்டிஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் தனம்குணசேகரன், அதியமான்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் மாரியம்மாள்முனிராஜ், நார்த்தம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கிருஷ்ணன், துணைத் தலைவர் சாந்தாவெங்கட்டப்பன், ஊராட்சி செயலாளர் மாது, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பச்சியப்பன், மாவட்ட மாணவர் சங்க துணை செயலாளர் தமிழரசன், பசுமைத் தாயக மாவட்ட துணை செயலாளர் சரவணன் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள், பள்ளியின் மேலாண்மை குழு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.