இந்திய திருநாட்டின் 77 வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு பென்னாகரம் சட்டமன்ற அலுவலம் முன்பு 77-வது சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் 77 அடி நீளமுள்ள தேசிய கொடியினை பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களோடு இணைந்து பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜி.கே.மணி அவர்கள் கொண்டாடினார்.
முன்னதாக சட்டமன்ற அலுவலகத்தில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பாமக மேற்கு மாவட்ட தலைவர் செல்வகுமார்,நகர செயலாளர் ஜீவா, மற்றும் நகர தலைவர் சந்தோஷ், ஒன்றிய தலைவர் அருள்மொழி, வெற்றி முன்னாள் நகர பொறுப்பாளர்கள் நீர்குந்தி மாது , ஆறுமுகம், மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.