Type Here to Get Search Results !

பாலக்கோடு தொட்டம்பட்டி சுடுகாட்டில் சூதாடிய 6 பேர் கைது, 3 மோட்டார் சைக்கிள் மற்றும் 1200 ரூபாய் பறிமுதல்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில்  சூதாட்டம் நடப்பதாக பாலக்கோடு டி.எஸ்.பி சிந்து அவர்களுக்கு இரகசிய தகவல் கிடைத்தது, அவரது உத்தரவின் பேரில் இன்று மாலை பாலக்கோடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது தொட்டம்பட்டி சுடுகாட்டில் சூதாடி கொண்டிருந்த 6  பேரையும்  போலீசார் பிடித்து விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிகளான சரவணன்  (வயது.45), மாதேஷ்  (வயது.46)  சின்னசாமி (வயது. 55), மாதேஷ்  (வயது. 32), சிவசக்தி (வயது.27), லோகேஷ் (வயது. 23) என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த  போலீசார்  அவர்களிடமிருந்த சீட்டு கட்டுக்களையும்  3 மோட்டார் சைக்கிள் மற்றும் 1200 ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies