Type Here to Get Search Results !

பாலக்கோடு அண்ணாநகரில் சட்டவிரோதமாக அரசு மதுபானம் விற்ற 2 பெண் உட்பட மூவர் கைது.

மாதிரி படம்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு  சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மது பானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பாலக்கோடு  போலீசாருக்கு இரகசிய  தகவல் கிடைத்தது.

அதனை தொடர்ந்து இன்று மாலை  போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாலக்கோடு அண்ணாநகரில் வீட்டில் வைத்து மதுபானங்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை  பிடித்து விசாரித்ததில்  ராஜாராமன்  (வயது. 26) என்பதும் வீட்டில் வைத்து அரசு மது பானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும்  தெரிய வந்தது, அதே போன்று காவாப்பட்டியை சேர்ந்த மீனா (வயது. 53), கனபதிகொட்டாய் பகுதியை சேர்ந்த சாவித்திரி (வயது. 60) ஆகியோர் வீட்டில் வைத்து மது விற்பனை செய்தது தெரிய வந்தது.

உடனடியாக அவர்கள் 3 பேரையும்  கைது செய்த பாலக்கோடு போலீசார் அவர்களிடமிருந்து   70 குவாட்டர் மற்றும் பீர்   பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies