Type Here to Get Search Results !

சந்திரயான் - 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியிருப்பது உலக அரங்கில் நாட்டின் பெருமையை உயர்த்தியுள்ளது. - ஜி.கே. மணி அறிக்கை.


சந்திரயான் - 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியிருப்பது உலக அரங்கில் நாட்டின் பெருமையை உயர்த்தியுள்ளது என பாமக கௌரவ தலைவரும், பென்னாகரம் எம் எல்ஏவுமான ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யுள்ளதாவது: சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலாவின் தென் துருவ பகுதியில் புதன்கிழமை மாலை 6.04 மணிக்கு வெற் றிகரமாக தரையிறங்கி உலக சாதனை படைத்துள்ளது.        இதனால் உலக அரங்கில் நமது நாட்டின் பெருமை உயர்ந்துள் ளது. இஸ்ரோ விஞ்ஞானிகள் தமிழ்நாட்டின் வீர முத்துவேல், சோம்நாத் உள்ளிட்ட அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்து கள். நிலவின் தென் துருவ பகுதி யில் லேண்டர் தரையிறக்கம் நிகழ்வு உலகில் முதலிடம், நம் அனைவருக்கும் பெருமை, அள வற்ற மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies