தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கருப்பாயிகொட்டாய் கிராமத்தில் நேற்று பெரியாண்டிச்சி கோயில் திருவிழா நடைப்பெற்றது, திருவிழாவை தொடர்ந்து இரவு சாமி ஊர்வலம் நடைப்பெற்றது. ஊர்வலத்தின் போது வைத்த பட்டாசு மினி சரக்கு வாகனத்தில் வைத்திருந்த பட்டாசுக்களின் மீது விழுந்தது, மளமளவென பட்டாசுக்கள் வெடிக்க தொடங்கியது, பக்தர்கள் பதறி அடித்து ஓடத் துவங்கினர்.
இச்சம்பவத்தில் கருப்பாயி கொட்டாயை சேர்ந்த விஜயகுமார் (வயது21) பரசுராமன் (20 ) யாசிகா (6) பிரதிக்க்ஷா (7) தர்ஷன் (6) உள்ளிட்ட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து குழந்தை உட்பட 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.