Type Here to Get Search Results !

சந்திராயன் -3 லேண்டார் நிலவில் தரை இறங்குவதை முன்னிட்டு பென்னாகரத்தை அடுத்துள்ள கொட்டாவூர் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர், மற்றும் ஆசிரியர் முயற்சியில் சந்திரயான் 3 என்ற வாசகத்தை உருவாக்கினர்.


சந்திராயன் -3 லேண்டார் நிலவில் தரை இறங்குவதை முன்னிட்டு பென்னாகரத்தை அடுத்துள்ள கொட்டாவூர்  அரசுப் பள்ளி மாணவ, மாணவியர், மற்றும் ஆசிரியர் முயற்சியில் சந்திரயான் 3 என்ற வாசகத்தை உருவாக்கினர்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் கடந்த மாதம் 14ஆம் தேதி சந்திரயான் மூன்று விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலத்தின் லேண்டர் ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 6 மணி அளவில் நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறக்கப் பட்டது. இரவில் விண்கலத்தினை தரையிறக்கம் செய்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற உள்ளது. இந்த நிலையில் சந்திர யான் - 3 விண்கல லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்க வேண்டும் என கோயில், அரசுப் பள்ளிகளில் சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றன.


தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கொட்டாவூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து சந்திராயன் 3 விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரை இறக்கம் செய்வதை வரவேற்கும் வகையில் சந்திரயான் - 3என்ற வாசகங்களை, மாணவர்கள் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து அமர்ந்து எழுத்துகளை உருவாக்கம் செய்தனர்.   


இந்த நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர் கே.வி.குமார். மா.சுரேஷ், சி.சு ரேஷ், கா.வைரலட்சுமி, சே.செல்லம், மல்லிகா, சுரேஷ் ரத்னகுமார், மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies