தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தங்கசரவணன் தலைமையில் இன்று நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு தர்மபுரி நாடாளுன்ற உறுப்பிணர் செந்தில்குமார் கலந்து கொண்டு 231 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், அரசு வழக்கறிஞர் பி.கே.முருகன், மாநில விவசாய அணி துணைத் தலைவர் சூடப்பட்டி சுப்ரமணி, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சந்திரசேகர், பள்ளி மேலாண்மை குழு துணைத் தலைவர் செந்தில்குமார், கவுன்சிலர்கள் முனிராஜ், யதிந்தர், வேலு, கார்த்திக், காந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் வீரப்பன், ஆறுமுகம், கிருஷ்ணன், திமுக பேரூர் கழக நிர்வாகிகள் அண்னா டாக்டர், மாதையன், வசிம், ஸ்டார்பாய், சதிஷ், வரதராஜ், பள்ளி தலைமை ஆசிரியை சுமதி உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்