Type Here to Get Search Results !

மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களை பெறுவதற்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்கள் வரும் 19ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.


முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களை பெறுவதற்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்கள் வருகின்ற 19.08.2023 மற்றும் 26.08.2023 ஆகிய இருதினங்களில் நடைபெறவுள்ளது, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல்.


இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 100 மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. இதில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 2 வருவாய் கோட்டங்களில், பல்வேறு அரசுத் துறைகளில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம்கள்

  1. தருமபுரி கோட்டத்தில் 19.08.2023 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணிவரை தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் 
  2. அரூர் கோட்டத்தில் 26.08.2023 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணிவரை அரூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியிலும் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் இதுநாள் வரை தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குதல், மாற்றுத்திறனாளிகள் நலவாரிய பதிவு செய்தல், UDID ஸ்மார்ட் கார்டு பதிவு செய்தல், மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பராமரிப்பு உதவித் தொகை, வங்கிகடன் மான்யம், உதவி உபகரணங்கள் வருவாய்த்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் வேலைவாய்ப்பு பதிவு, புதுபித்தல், வேலை வாய்ப்பற்றோர் நிதி உதவித்தொகை, தனியார் துறை வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருதல், தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல், மாவட்ட தொழில் மையம் மூலம் PMEGP, UYEGP திட்டத்தின் வங்கி கடன் உதவி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் NHFDC உள்ளிட்ட திட்டத்தில் சுயதொழில் புரிவதற்கு வங்கிகடன் மற்றும் வீடு கட்டுவதற்கு கடனுதவி, ஆவின் நிறுவனத்தில் உற்பத்தி பொருட்கள் கொள்முதல் செய்வதற்கான முகவர்கள் நியமனம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு அட்டை, மற்றும் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் மருத்துவ காப்பீட்டு உறுப்பினர் சேர்க்கை, போன்ற திட்டங்களில் பயன் பெற நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, பல்வேறு துறைகளுடன் இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.


எனவே மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, UDID ஸ்மார்ட் கார்டு, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை புகைப்படம் 5 ஆகியவற்றுடன் மேற்காணும் முகாமில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884