நிகழ்ச்சிக்கு பி அக்ரகாரம் தமிழ் நாடு கிராம வங்கியின் கிளை மேலாளர் சந்திரகுமார், அரசு மேல்நிலைப் தலைமை ஆசிரியர் வையாபுரி, ஸ்பீடு தொண்டு நிறுவன தலைவர் சரவணன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் சார்பில் முருகுசாமி, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சார்பில் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.
கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கில் பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் வெங்கடாசலம்,அரூர் எல்ப் தொண்டு நிறுவன இயக்குநர் கருணாமூர்த்தி, மாநில பயிற்றுநர் நாகப்பன் ஆகியோர் சிறப்பித்தனர். முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார். அனைவரும் இந்தியா 2047 குறித்த உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பி அக்ரகாரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியர்களின் கலைநிகழ்ச்சி மற்றும் சிலம்பாட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் 350க்கும் மேற்ப்பட்ட கல்லூரி பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக ஸ்பீடு தொண்டு நிறுவன செயலாளர் அறிவழகன் நன்றி கூறினார்.
.gif)

