தருமபுரி நல்லானூர் மருதம் நெல்லி ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக தேசிய நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஆகஸ்ட் 20 சத்பவனா திவாஸ் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்த தினம் மதங்கள், மொழிகள் மற்றும் பிராந்திய மக்களிடையே தேசிய ஒருமைப்பாடு மற்றும் வகுப்புவாத நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் வன்முறையை தவிர்த்து நல்லிணக்கத்தை உருவாக்கவும் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த உறுமொழி நிகழ்விற்கு கல்லூரி தாளாளர் முனைவர் கோவிந்த் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் பரஞ்சோதி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் சதீஸ் குமார் ராஜா, பெருமாள் ஆகியோர் உறுதிமொழி நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.
கல்லூரி துறை தலைவர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், துறை மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு நல்லிணக்க நாள் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.
.gif)

