நிகழச்சிக்கு அரூர் பேரூராட்சி தலைவர் திருமதி.இந்திராணி சூர்யா தனபால், ஒன்றிய குழு தலைவர் பொன்மலர் பசுபதி,தீபம் தொண்டு நிறுவன இயக்குநர் திருமதி.கற்பகவல்லி, ஆங்கில துறை உதவி பேராசிரியர் முனைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.சம்பத்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
நமது பாரம்பரியத்தில் பெருமை கொள்வோம் என்ற தலைப்பில் ஆங்கில துறை உதவி பேராசிரியர் முனைவர் சக்திகுமார் அவர்களும், நமது ஒற்றுமையே பலம் என்ற தலைப்பில் பொருளியல் துறை தலைவர்/ கவுரவ விரிவுரையாளர் முனைவர் தங்கப்பாண்டியன் அவர்களும், குடிமக்களின் கடமைகளை நேர்மையுடன் நிறைவேற்றுதல் குறித்து நூலகர் அன்பரசன் அவர்களும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சிறப்பாக கலந்து கொண்டனர். முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் இந்தியா'2047 பற்றிய உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் 250க்கும் மேற்ப்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள், தீபம் தொண்டு நிறுவன நிர்வாகிகள், நேரு யுவ கேந்திராவின் தேசிய இளைஞர் தொண்டர் ஞானராஜ் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.மேலும் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துரையாடலில் சிறப்பாக கலந்து கொண்ட 5 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.
நிறைவாக அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் திரு.கோபி நாத் நன்றி கூறினார்.