Type Here to Get Search Results !

கவுண்டனூரில் மாயமான 11ம் வகுப்பு மாணவி மீட்டு,பெற்றோரிடம் ஒப்படைப்பு. நன்றாக படிக்க அறிவுரை வழங்கிய போலீசார்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு  அருகே கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி இவர் அங்குள்ள அரசு பள்ளியில் +1 படித்து வந்தார், கடந்த 15ம் தேதி சுதந்திர தினத்தன்று பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை, உறவிணர்கள், நண்பர்கள் வீடு உட்பட எங்கு தேடியும் கிடைக்காததால் மகளை கண்டுபிடித்து தர கோரி தாய் பாலக்கோடு  போலீசில் புகார் அளித்தார்.


புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வந்த நிலையில், மாணவி தர்மபுரி பிடமனேரியில் உள்ள உறவினர் வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக மாணவியை காவல்நிலையம் அழைத்து வந்த போலீசார் விசாரித்ததில் மாணவியின் தாய் அடிக்கடி திட்டி கொண்டே இருந்ததால் கோபித்து கொண்டு உறவிணர் வீட்டுக்கு சென்றதாக கூறினார்.


இதையடுத்து மாணவியின் பெற்றோரை அழைத்து மாணவி மற்றும் அவரது தாய் இருவருக்கும் அறிவுரை கூறி மாணவியை நன்றாக படிக்க வேண்டும் என கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies