தமிழகத்திலுள்ள Mangalore Refinery and Petrochemicals Ltd-இல் அனைத்து மாவட்டங்களுக்கும் Retail Outlet Dealers-ஆக பணிபுரிய ஆட்தேர்வு நடைபெறவுள்ளது. இதில் முன்னாள் படைவீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் “CC1” எனக் குறிப்பிட்டிருக்கும் பிரிவுகளில் தகுதியான முன்னாள் படைவீரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி : Minimum 10 th Std
இணையதள முகவரி : www.mrpl.co.in
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 30.10.2023.
இதன் தொடர்பான அனைத்து விவரங்களும் தெரிந்து கொள்ள உரிய Guidelines Web site: www.mdsp.co.in மூலம் பெற்றுக் கொள்ளலாம். அல்லது தொலைபேசி எண். 0824-2882710 (or) 0824-2882707 மூலம் தொடர்பு கொண்டும் விவரம் பெறலாம். E-mail : 1.pushparaj@mrpl.co.in (or) kanibalan@mrpl.co.in
எனவே தருமபுரி மாவட்டத்தை சார்ந்த தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறும், விண்ணப்பித்திருப்பின் அதன் விவரத்தினை தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.