Type Here to Get Search Results !

நல்லம்பள்ளி அடுத்த கெட்டுப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மேசை மற்றும் இருக்கைகளை வழங்கிய தருமபுரி MLA.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், டொக்குபோதன அள்ளி ஊராட்சி, கெட்டுப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு  தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்ட நிதியில் ரூபாய் 5.00 இலட்சம் மதிப்பீட்டில் டெஸ்க்,பென்ச் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பள்ளிக்கு டெஸ்க்,பென்ச் வழங்கும் நிகழ்வு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தலைமையில்  நடைபெற்றது.   

அதனைத் தொடர்ந்து பள்ளியில் மரக்கன்றுகளை நட்டு, மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கியும், பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப்புத்தகங்கள், பேனா உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார். பின்னர், கெட்டுப்பட்டி கிராமத்தில் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் அருகில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்ட நிதியில் ரூபாய் 1.70 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணற்றிற்கு மின்மோட்டாருடன் மினி டேங்க் அமைக்கப்பட்டு, பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். 


இந்நிகழ்வுகளில், பள்ளி தலைமை ஆசிரியர் ரேணுகா, பாமக மாநில செயற்குழு உறுப்பினர் பெ.பெரியசாமி,வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்  இ.மா.பாலகிருஷ்ணன்,  பசுமைத் தாயக மாவட்ட துணை செயலாளர் மா.தமிழரசன், ஒன்றிய கவுன்சிலர் த.காமராஜ், மாவட்ட துணை செயலாளர் ரெ.மு.மனோகரன், ஒன்றிய செயலாளர் வ.அறிவு, மகளிர் சுய உதவிக்குழு தலைவி இராஜசுலோஷனா, ஊராட்சி மன்றத் தலைவர் சிலம்பரசன், நிர்வாகிகள் காமராஜ், சக்திவேல், குமார், செல்வம், முனுசாமி மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies