Type Here to Get Search Results !

ஒகேனக்கல்லில் ஆர்ப்பரித்து ஓடும் காவிரி ஆற்றின் நீர்வரத்தினை பார்வையிட்ட பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜி.கே.மணி.


தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் ஆர்ப்பரித்து ஓடும் காவிரி ஆற்றின் நீர்வரத்தினை பார்வையிட்டு பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜி.கே.மணி அவர்கள் ஆய்வினை மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியது காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தமிழ்நாடு எல்லையான பிலி குண்டுவில்  மாலை 3.45 க்கு வினாடிக்கு 10,500 கன அடி, ஒகேனக்கல் பகுதிக்கு நீர்வரத்து வந்து கொண்டுள்ளது. பிலிகுண்டுவில் வரும் 10,500 கன அடி தண்ணீர் ஒகேனக்கல் பகுதியும்,மேட்டூர் அணையையும் முழுவதும் வந்தடைய சற்று தாமதம் ஆகும். 


மேலும் நீர்வரத்து அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது என்று கூறினார். இந்நிகழ்வில் பென்னாகரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கவிதா இராமகிருஷ்ணன் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் சங்க மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மற்றும் மேற்கு ஒன்றிய தலைவர் அருள்மொழி ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies