Type Here to Get Search Results !

மாணவர்களின் நலன் கருதி பேருந்து சேவையை தொடங்கவேண்டும் என மாணவர்கள் கோரிக்கை.


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு  பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் வேதனை. பென்னாகரம் அரசு பள்ளியில் மாலை நேர சிறப்பு வகுப்புகள் 5 மணி வரை  நடைப்பெறுகிறது. பின்னர் பேருந்து நிலையத்திற்கு சென்றால்  சரியான நேரத்தில் அரசு பேருந்துகள் டீக்கடை மூலலைன் செல்வதற்கு வருவதில்லை.

சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேர பயணங்களில் அவ்வழித்தடத்தில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் பள்ளி  மாணவர்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி முடிந்த பின்பு மாலை  5.30 மணிக்குள் பேருந்து வசதியினை ஏற்பாடு செய்து தருமாறு பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies