Type Here to Get Search Results !

விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

 

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காய்கறிகளின் விலைவாசி உயர்வினை  கட்டுப்படுத்த தவறிய திமுக அரசினை  கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. 

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தருமபுரி அதிமுக மாவட்ட செயலாளர் கே.பி.அன்பழகன் தலைமையில் விலைவாசி உயர்வை கண்டித்தும், அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுவதை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது, இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், தருமபுரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் எஸ்ஆர். வெற்றிவேல், அதிமுக நகர செயலாளர் பூக்கடை ரவி, நீலாபுரம் செல்வம் மற்றும் அக்கட்சியினர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies