உணவு பாதுகாப்பு துறை கண்காணிப்பு குழு கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அவர்கள், ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மறுபயன்பாட்டுக்கு உபயோகப்படுத்துதலான ரூகோ குறித்தும், உணவுப் பொருள்கள் மற்றும் எண்ணெய் பலகாரங்கள், வடை போண்டா, பஜ்ஜி உள்ளிட்ட தின்பண்டங்கள் அச்சிடப்பட்ட செய்தித்தாள்களில் பொட்டலமிடுதல், பரிமாறுதல் தடை குறித்தும் மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி (பிளாஸ்டிக்) கவர்களில் சூடான டீ, காபி மற்றும் சாம்பார், ரசம் பார்சல் தடை குறித்து அதன் கெடுதல்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தியதன் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில் கடத்தூரில், மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் அவர்கள் தர்மபுரி மெயின் ரோடு, அரூர் ரோடு ,பஸ் நிலையம் மற்றும் பொம்மிடி ரோடு பகுதிகளில் உள்ள பேக்கரிகள், இனிப்பு கார வகை தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் உணவகங்களில் ஆய்வு செய்தார். உடன் தேநீர் தரமும் ஆய்வு செய்தார். இன்றைய ஆய்வில் இரண்டு பேக்கரிகளில் அச்சிடப்பட்ட செய்தித்தாள்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த எண்ணெய் பலகாரங்கள் மற்றும் பப்ஸ்,கேக் வகைகளை பரிமாற பயன்படுத்திய அச்சிடப்பட்ட காகிதங்கள் அப்புறப்படுத்தினார். ஒரு கடையில் நெகிழி கவர்களில் சூடான டீ பார்சலிட்டதை பறிமுதல் செய்தார்.
மேலும் ஒரு இனிப்பு காரம் தயாரிப்பு நிறுவனத்தில் செயற்கை நிறமேற்றப்பட்ட வறுத்த நிலக்கடலை மற்றும் பாவக்காய் சிப்ஸ், உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ் போன்றவற்றை பறிமுதல் செய்தார். இவ்வாறு செய்தல் தவறு என்று விழிப்புணர்வு செய்து 3 கடைகளுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் உடன் தலா ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சுகாதாரம் சரிவர பராமரிக்காத ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு மேம்பாட்டு அறிக்கை நோட்டீஸ் அளித்திட மாவட்ட நியமன அலுவலர்க்கு பரிந்துரை செய்தார்.
மேலும் உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் இனிப்பு காரம் தயாரிக்கும் நிலையங்களில் ஒரு முறை பயன்படுத்தி மீதமாகும் எண்ணெயை தனியே சேகரம் செய்து உணவு பாதுகாப்பு துறையால் அங்கீகரிக்கப்பட்ட ரூகோ (மறு பயன்பாட்டுக்கு பயன்படுத்திய சமையல் எண்ணெய்-RUCO) டீலர் இடம் அளித்து உரிய தொகை உடன் பெற்றுக்கொள்ள விழிப்புணர்வும் செய்தார்.
.gif)


