Type Here to Get Search Results !

அரசு தொழிற் பயிற்சி நிலையதிற்கு ரூ.5 இலட்சம் மதிப்பில் மேசைகள் மற்றும் இருக்கைகள் வழங்கிய MLA.


தருமபுரி மாவட்டம், கடகத்தூரில் அமைந்துள்ள அரசு தொழிற் பயிற்சி நிலைய மாணவ, மாணவிகளின் நலன் கருதி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்ட நிதியில் ரூபாய் 5.00 இலட்சம் மதிப்பீட்டில் டெஸ்க்,பென்ச் வழங்க நிதி ஒதுக்கப்பட்டு, தொழிற் பயிற்சி நிலையத்திற்கு டெஸ்க், பென்ச் வழங்கும் விழா நடைபெற்றது. 


இந்நகழ்வில் தருமபுரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கலந்துக்கொண்டு டெஸ்க்,பென்ச் பள்ளிக்கு வழங்கினார். இந்நிகழ்வில், அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் சிவக்குமார், மாவட்ட பொறுப்பாளர் இமா.பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் சங்க  செயலாளர் ப.சி.சிவக்குமார், ஒன்றிய செயலாளர் பச்சமுத்து, பசுமைத் தாயக மாவட்ட துணை செயலாளர் தமிழரசன், வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை மாவட்ட பொறுப்பாளர் ஆனந்த், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தீர்த்தமலை, மாவட்ட இளைஞர் சங்க துணை தலைவர் சந்தோஷ், ஊடகப் பேரவை பொறுப்பாளர் கணேசன் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies