Type Here to Get Search Results !

அரூர் அரசு கலைக் கல்லூரியில் வேளாண்மை துறை சார்பில் உழவன் செயலி பதிவிறக்கம் விழிப்புணர்வு முகாம்


வேளாண்மை துறை உதவி இயக்குனர் திருமதி சரோஜா அவர்கள் தலைமையில் அரூர் அரசு கலைக்கல்லூரியில் கல்லூரி முதல்வர் முனைவர் குமார் அவர்கள் முன்னிலையில் உழவன் செயலி பதிவிறக்கம் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தலைமை உரை வழங்கிய திருமதி சரோஜா அவர்கள் பேசும் பொழுது மாணவ மாணவிகள் உழவன் செயலி பற்றி விவசாய குடும்பத்தில் உள்ள பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் மேலும் உழவன் செயலியில் விவசாயம் தொடர்பான 23 பயனுள்ள கருத்துக்கள் உள்ளன என தெரியப்படுத்த வேண்டும் மேலும் உழவன் செயலி அதன் மூலம் பயன்கள் பெற்று விவசாயிகள் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எடுத்துக் கூறினார்கள்.


இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் மற்றும் அனைத்து துறை தலைவர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் மற்றும் வேளாண்மை துறை அட்மா திட்ட பணியாளர்கள் மற்றும் பாரத பிரதமரின் திருத்தி அமைக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்ட பணியாளர்கள் மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies