Type Here to Get Search Results !

பாலக்கோடு பகுதியில் 5அரசு பள்ளிகளுக்கு 31 இலட்சம் ரூபாய் மதிப்பிலான இருக்கைகளை வழங்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல். ஏ.

 

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம், அனுமந்தபுரம், பேளாரஅள்ளி, வாழைத்தோட்டம், திருமல்வாடி உள்ளிட்ட அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகமானதால் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய டெஸ்க், பென்ச்,  இல்லாமல் மாணவர்கள் நெருக்கமாகவும், தரையில் அமர்ந்தும் படித்து வந்தனர்.

மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக 5 அரசு பள்ளிகளுக்கு சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து 31 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 220 இருக்கைகளை அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies