Type Here to Get Search Results !

சந்திராபுரம் கிராமத்தில் தரமற்ற கழிவுநீர் கால்வாய் அமைத்தாக பொதுமக்கள் குற்றசாட்டு, நோய் பரவும் அபாயம்.


பாலக்கோடு ஒன்றியத்திற்க்குட்பட்ட கெண்டேயனஅள்ளி ஊராட்சி சந்திராபுரம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் கழிவு நீர் இல்லாததால் புதிய கழிவு நீர் கால்வாய் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.


அதனை தொடர்ந்து 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் 7.19 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கீழ் சந்திராபுரம் துரை வீடு முதல் விநாயகர் கோயில் வரை கழிவு நீர் அமைக்கப்பட்டது, அதே போன்று மேல் சந்திராபுரத்தில் ராஜன் வீடு முதல் மதுரை வீரன் கோயில் வரை 3.10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கழிவு நீர் கால்வாய் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதாலும், கழிவு நீர் வெளியேறி செல்லமால் வீட்டின் முன்பு கழிவு நீர் தேங்கும்படி உள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.


மேலும் அனுமதிக்கப்பட்ட அளவை விட குறைவான தூரத்திற்க்கு மட்டுமே சாக்கடை கால்வாய் அமைத்து உள்ளனர். இதில் பல்வேறு முறைகேடுகள் ஏற்பட்டு இருப்பதாகவும், இதற்குபஞ்சாயத்து தலைவர், கிளர்க், பி.டி.ஓ ஆகியோர் உடந்தையாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies